தனுஷின் மாரி பட இசை வெளியீடு தேதி

Maari-Audio-Release-Date-01தனுஷ் தனது அனேகன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயாராகும் அடுத்த படம் ‘மாரி’. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது வெகு சுறுசுறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ‘மாரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

‘மாரி’ படத்தின் இசை வெளியீட்டு விழா மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும், இந்த படத்தை ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் அனிருத் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

 

இந்த படத்தின் மற்றொரு சிறப்பு என்னவெனில் தனுஷ், காஜல் அகர்வால் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபல பாடகர் விஜய் ஜேசுதாஸ் போலீஸ் கேரக்டரில் நடிகராக அறிமுகமாகிறார். ரோபோ சங்கர், காளி, அர்ஜூனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தனுஷின் வுண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவுவும், பிரசன்னா எடிட்டிங்கும் செய்துள்ளனர். ‘காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும் படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Tags: , , ,

Related Posts