சிம்புவுக்கு ஆதரவாக பேசிய அஜித்

Ajith-Support-for-Simbuசிம்பு நடித்த வாலு திரைப்படம் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் எடுக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகியும் வெளியிட முடியாமல் நிதி பிரச்சனையில் உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி 5 முறைக்கு மேல் மாற்றப்பட்டுள்ளது.

 

ஒரு வழியாக இந்த பிரச்னைக்கு அவருடைய தந்தையே உதவி செய்ய முன்வந்துள்ளார். அவரே இந்த படத்தை வாங்கி வெளியிடவுள்ளார். இதனால், இனி படம் கண்டிப்பாக சொன்ன தேதிக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு மிகவும் மன வருத்தத்துடன் பல விஷயங்களை கூறினார்.

 

இதில் இவர் பேசுகையில் ‘இந்த 2 வருடமாக என் படங்கள் வரவில்லை, என்னிடம் உள்ள எல்லாம் என்னை விட்டு போனது, ஒரு பெண்ணை காதலித்தேன் அவளும் என்னை விட்டு சென்றாள். நான் மிகவும் மனமுடைந்து எந்த ஆதரவும் இல்லாமல் இருந்த நேரத்தில் தான், என் அப்பாவிடம் போன் செய்து அஜித் “கவலைப்படாதீங்க சார் உங்கள் மகன் கண்டிப்பாக பெரிய இடத்திற்கு வருவான்” என கூறினார், நான் இங்கு இருக்க ஒரே காரணம் என் ரசிகர்கள் மட்டும் தான்’ என மிகவும் சோகத்துடன் கண்களில் கண்ணீருடன் பேசினார்.

Tags: , , ,

Related Posts