நான் எப்பவோ அரசியலில் இறங்கிவிட்டேன்

Yennai-Arindhaal-Ajith-New-Look-Stills-23அஜித் எப்போதும், எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்தகொள்ளாதவர், அதிலும் குறிப்பாக அரசியல் சார்ந்த எந்த விஷயத்திலும் தன் தலை இருக்க கூடாது என கவனமாக இருப்பார். தன் ரசிகர்களையும் எந்த ஒரு அரசியல் போஸ்டர்களிலும் தன் படம் இருக்க கூடாது என அன்பு கட்டளை இட்டுள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் அஜித்திடம் அரசியல் குறித்து கேட்டதற்கு அவர் கூறிய தகவல் இது தான்.

 

‘இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னைச் சுத்தி இருந்துட்டேதான் இருக்கு. சினிமாத் துறை முழுக்கவே அரசியல்தான். கருணையே இல்லாத இந்தத் துறையில் ஒருத்தன் நிற்க வேண்டும் என்றால் அதுக்கு நிச்சயம் அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

 

சினிமாவில் யாருடைய பின்புலமும் இல்லாமல் வந்து நிலைச்சு நிற்கிறேன். நான் எப்பவோ அரசியலில் இறங்கிவிட்டேன். அரசியல் இல்லாத ஒரு இடம் கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் இந்த உலகத்தில் கிடையாது. நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா?” என அஜித் கூறியுள்ளார். இந்த தகவலை தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று இன்று வெளியிட்டுள்ளது.

Tags: , ,

Related Posts