மனைவியின் தங்கை படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித்?

ajith-guest-role-for-shamiliமணிரத்னம் இயக்கிய ‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி, அதன் பின்னர் தைப்பூசம், எங்க பாப்பா, துர்கா, செந்தூர தேவி, தேவர் வீட்டு பொண்ணு போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

 

பின்னர் படிப்பில் கவனம் செலுத்திய ஷாமிலி, சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து, ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ படித்து பட்டதாரி ஆனார். அதையடுத்து, சிங்கப்பூர் சென்று இயக்கம், திரைப்பட வர்த்தகம், தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டார். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.  தற்போது அவர் கோலிவுட்டில் கதாநாயகியாக எண்ட்ரி ஆக கதை கேட்டு வருகிறாராம்.

 

ஷாமிலிக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்கள் அவரிடம் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அஜீத்திடம் கால்ஷீட் வாங்கித்தரும்படி கேட்டுக்கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயத்தில் அஜீத் உஷாராக இருப்பதாகவும், மனைவி ஷாலினியின் தங்கை அறிமுகமாகும் படமாக இருந்தாலும், சிறப்பு தோற்றத்தில் நடிக்க போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags: , , ,

Related Posts